
Cinema: தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தன்னுடைய படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளம் வருபவர் இயக்குனர் சசிகுமார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் அப்போது டாப் ஹீரோயினாக இருந்த நயன்தாராவை நடிக்க வைக்க சசிகுமார் முயற்சி செய்துள்ளார்.
அந்த நேரத்தில் விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா ஜோடியாக நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் முன்னணி இயக்குனர்களின் படங்களும் கூட. அதனால் அந்த நேரத்தில் சுப்ரமணியபுரம் படத்தின் கதை நயன்தாராவிற்கு பிடித்திருந்த போது கூட அந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டியுள்ளார் நயன்தாரா.
புது இயக்குனர் சசிகுமார், அறிமுக நடிகர் ஜெய் இவர்களை நம்பி நடித்தால் நம்முடைய மார்க்கெட் காலியாகிவிடும் என்று சுப்ரமணியபுரம் படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார் நயன்தாரா. சசிகுமார் எத்தனையோ பிரபலங்களுடன் பேசியும் நயன்தாராவை சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தும், நயன்தாரா தன்னுடைய முடிவில் தீவிரமாக இருந்ததால் சசிகுமாரால் நயன்தாராவை சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை.
பின்னர் ஜெய் மற்றும் ஸ்வாதியை ஜோடியாக நடிக்க வைத்து தானும் அந்த படத்தில் நடித்து மாபெரும் வெற்றிப்படமாக சுப்ரமணியபுரம் படத்தை மாற்றிக்காட்டினார் சசிக்குமார். அன்று தனது படத்தில் நடிக்க நோ சொன்ன நயன்தாரா மீது இப்பவும் மனக்கசப்பில் சசிகுமார் இருப்பதாக திரைவட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.