வெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!!
நாம் ஒரு நபரிடம் நம் அன்றாட தேவைக்காக இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது.
ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்னைத்தான் மலை போல நம்பி வந்திருக்கிறேன்.
தயவுசெய்து இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே என்று உங்களது நண்பரோ அல்லது உறவினரோ கண்கள் கலங்கியபடி, கைகளைப் பிசைந்து கொண்டு உங்கள் முன் கூனி குறுகி நிற்கும் போது இரக்கப்பட்டு நீங்கள் உங்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து அவர்களுக்கு உதவியிருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு வாங்க முடியாமல் இருக்கும் நிலை ஏற்படும்.அந்த பணத்தை திரும்ப வாங்க முடியாத நிலை ஏற்படும் போது அதற்கு அந்த நபர் ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்கின்றார்.
வெத்து பேப்பரில் அவரிடம் கையெழுத்து வாங்கினால் அதை வைத்து அந்த பணத்தை திரும்ப வாங்கிவிடலாம் என்று நினைத்துக் கொள்கின்றார்.
சிலர் இன்னும் மோசமாக அந்த வெத்து பேப்பரை வைத்து அவர்களை மிரட்டி அவர்கள் வாங்கிய பணத்திற்கு அதிகமாக அவர்களை தர சொல்லி வற்புறுத்துகின்றனர். இதனால் சிலர் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இறந்து போகின்றனர்.
இவ்வாறு வாங்கப்படும் வெத்து பேப்பரின் உள்ள கையெழுத்து செல்லுமா? செல்லாதா? என்று சட்டத்தின் வழி பார்க்கலாம்.ஒரு நபரோ அல்லது ஒரு நிறுவனமோ உங்களிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கினால் அது செல்லும் செல்லாது.
குழப்பமாக உள்ளதா ஒருவரிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது என்றால் அந்த கையெழுத்து வாங்கப்பட்ட நபர் அவர் என்னிடம் கடன் வாங்கினார்.
அதை திருப்பித் தரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் மற்றும் கையெழுத்து இட்ட நபரோ அவர் தன்னை ஏமாற்றி அல்லது வற்புறுத்தி தன்னிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டார் என்று இருவருமே நிரூபிக்க வேண்டும்.
இதில் யார் நிரூபிக்கிறார்களோ அவர்களின் பக்கம் இருக்கும் நியாயம் மட்டும்தான் செல்லும் நீங்கள் இந்த பேப்பரை எங்கு எடுத்து சென்றாலும் இதுதான் சட்டபூர்வமான பதில்.
இதில் இன்னும் ஒரு படி மேலாக சிலர் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்குகின்றனர் அதுவும் செல்லுமா? செல்லாதா? என்று சிலருக்கு கேள்வி இருக்கும்.
அதற்கும் சில சட்ட வரைமுறைகள் உண்டு முதலில் எந்த ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாலும் அதனை முதலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இது Indian registration act section 17படி ரூ.100க்கு மேல் உள்ள அனைத்து பத்திரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதனால் எந்த ஒரு பத்திரமும் ஆவணமும் சாட்சியாக காட்டப்படுமா என்றால் கட்டாயமாக அது செல்லும். ஆனாலும் Indian evidence act section 65 படி அது இரண்டாவது சாட்சியாக மட்டுமே அமையும்.
அதனால் கையெழுத்திட்ட நபர் தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார் என்று வழக்கு பதிவு செய்தால் அவர்கள் மூலமாக இவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இவற்றின் மூலம் கோர்ட்டில் அந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட நபரே முழுவதுமாக நிரூபிக்கப்பட வேண்டும்.
எனவே எந்த ஒரு நபரும் வெத்து பேப்பரிலோ அல்லது ஆவணத்திலோ கையெழுத்து விட்டால் இனி பயப்பட வேண்டாம் சட்டத்தின் வழி சென்றால் போதும்.