இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையில் போட்டியிட்டது. படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.
பின்பு காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாதது அக்கட்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். சான்றாக நேற்று காங்கிரஸ் கட்சியின் MP சஞ்சய் சிங் கட்சியிலிருந்து விலகினார்.
விலகிய பின்னர் அவர் கூறியது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் காங்கிரஸ் தலைமை இல்லாமல் திண்டாடிகொண்டு இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.
மேலும் படிக்க : அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!
இன்று காங்கிரஸ் கட்சியின் பொது குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைமை யார் என்பதை முடிவு செய்யும் என எதிர்பார்க்க படுகிறது.
டெல்லியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பொது குழு இடைக்கால தலைமை முடிவு செய்யபடும். இதற்கு சச்சின் பைலட் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.
யார் தலைமை பொறுப்பை ஏற்பார் என்பதை பொறுத்து தான் பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க : அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.