மகனுக்கு பதவி கொடுத்தது தாப்பாகிவிட்டதோ?? உதயநிதி பக்கபலத்தை காட்டிய இளைஞர் அணி நிர்வாகிகள்.. கடுப்பான ஸ்டாலின்!!

0
382
Is it wrong to give the post to the son?? The youth team administrators who showed the side of Udayanidhi.. Fierce Stalin!!
Is it wrong to give the post to the son?? The youth team administrators who showed the side of Udayanidhi.. Fierce Stalin!!

மகனுக்கு பதவி கொடுத்தது தாப்பாகிவிட்டதோ?? உதயநிதி பக்கபலத்தை காட்டிய இளைஞர் அணி நிர்வாகிகள்.. கடுப்பான ஸ்டாலின்!!

திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து வாரிசு அரசியல் என்று பலரும் விமர்சனம் செய்து வந்த வேலையில் தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக தனது மகனுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கியுள்ளது.உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியதும் எதிர்க்கட்சி என தொடங்கி அனைவரும் வாரிசு அரசியல் என்று கூறிவந்த நிலையில் ஆளும்  கட்சி அமைச்சர்களே, நாங்கள் இவருக்கும் ஆதரவளிப்போம் இவருடைய மகன் இன்பநதி வந்தாலும் ஆதரவு அளிப்போம் என்று கூறி அதனை வெட்ட வெளிச்சம் ஆக்கினர்.

ஆனால் முதல்வர் ஸ்டாலினின் திட்டம் வேறாக இருந்த நிலையில், அனைவரின் வேண்டுகோள் இணங்க குறுகிய காலத்திலேயே அவருடைய மகனுக்கு பதவி கொடுக்கும் நிலைமை வந்துவிட்டது. தற்பொழுது இந்த அமைச்சர் பதவியால் அவருடைய இளைஞர் அணி நிர்வாகிகள் பெரும் அளவில் ஆட்டம் காண்பித்து வருவதாக புகார்கள் அடுத்தடுத்து வந்த வண்ணமாகவே உள்ளதால் இது முதல்வருக்கு சிக்கலாக மாறியுள்ளது.

ஏதாவது வேலையாக வேண்டும் என்றால் அங்குள்ள நிர்வாகிகளிடம் இளைஞர் அணி நிர்வாகிகள் உதயநிதி பெயரை வைத்து வரம்பு மீறி நடந்து கொள்வதால் உட்கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இவ்வாறான முறையை ஸ்டாலின் கண்டிக்கத்திருப்பதும் மேலும் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் முதல்வர் என அனைவரும் அமைதி ஊர்வலம் மேற்கொண்டதை அடுத்து அதில் ஸ்டாலின் பெயரைக் கொண்டு கோஷமிடாமல் அனைவரும் உதயநிதி ஸ்டாலின் பெயரை கோஷமிட்டு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தன் மகனுக்கு இடம் கொடுத்தது தப்பாகிவிட்டதோ என்று ஸ்டாலின் நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டது என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவரது இளைஞர் அணி நிர்வாகிகளை அழைத்து பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். தலைவர் என்பவர் ஒருவர் மட்டும்தான் உங்களுடைய கெத்தை காட்ட வேண்டும் என்பதற்காக மற்றவர்களிடம் வெறுப்பை உண்டாக்கி விடாதீர்கள், இனிவரும் நாட்களில் எனது அனுமதி இன்றி முதல்வரையோ அல்லது வேறு அமைச்சர்களையோ சந்திக்கக் கூடாது அதேபோல மாவட்ட செயலாளர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறி அனைவரும் அடக்கி வாசியுங்கள் என வன்மையாக கண்டித்து உள்ளதாக கூறுகின்றனர்.

இவ்வாறு இளைஞர் அணி நிர்வாகிகள் தொடர்ந்து வரம்பு மீறி நடந்துவந்தால் அதுவே உட்கட்சிக்குள் அதிகளவில் பிரச்னை உண்டாக வழிவகுத்துவிடும் என்பதால் தற்பொழுதிலிருந்தே கண்டித்து வைப்பது நல்லது என உதயநிதி அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

Previous articleசெய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! அரியர் மாணவர்களும் எக்ஸாம் எழுதலாம்!
Next articleநீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!