வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?

0
331

வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?

அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த வரலாறு படத்தில் முதலில் நடிக வேண்டியது கமல்தான் என நடன இயக்குனர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் சிவசங்கரும் ஒருவர். இதுவரை 800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் பணிபுரிந்த வரலாறு திரைப்படத்தை பற்றி வெளி உலகிற்குத் தெரியாத பல தகவல்களை சொல்லியுள்ளார்.

வரலாறு படத்தில் அஜித் பெண் தன்மை கொண்ட பரதநாட்டிய கலைஞராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு நடன அசைவுகள் மற்றும் நளினமாக நடந்து கொள்வது குறித்து சொல்லிக் கொடுத்ததுடன் அந்த படத்தில் இடம்பெறும் இன்னிசை அளபெடையே என்ற பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்ததும் இவர்தான்.

இந்த படம் பற்றி பேசிய அவர் ‘முதலில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், இந்த படத்தில் நடிக்க வைக்க கமல்ஹாசனைதான் அனுகினார். ஆனால் அவர் அப்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு அஜித்தை அனுக அவர் தயங்கினார். இயக்குனர்தான் நம்பிக்கைக் கொடுத்து நடிக்க வைத்தார். இந்த படத்தில் நான் சொல்லிக் கொடுத்த விஷயங்களை அஜித் பிரமாதமாக உள்வாங்கி நடித்தார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பல படங்கள் தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்துக்காக உடல் எடையைக் குறைத்த அஜித் தனது திறமையை நிரூபித்து வெற்றியை ஈட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?
Next articleகலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !