மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா?

0
174
#image_title

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா?

நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாக்கியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் இயக்கநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு இப்படம் மூன்றாவது படமாகும். இப்படத்தின் டிரெய்லர் யூடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

80களில் நடப்பதுபோல படத்தின் கதை அமைப்பட்டுள்ளதாலும்,

படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், படம் டைம் – ட்ராவல் பற்றிய கதை என்றும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மூலம் தெரிகிறது.

தற்போதைய இளைஞர்களின் ரசனைக்கு பிடித்த படி வசனங்களுடன் படத்தை இயக்கும் ஆதித் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு தற்போது புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.

நடிகர் விஷால் அவர்கள், தங்கள் நிறுவனத்திற்கு தர வேண்டிய 21.29 கோடி ரூபாயை படம் முடிந்த பிறகும் இன்னும் தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது இரு தரப்பினரும் தங்கள் வாதங்களையும் முன்வைத்தனர். இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வரும் 12ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகவும், விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ளார் .

மேலும், லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் தர வேண்டிய 21.29 கோடி ரூபாயில் 15 கோடி ரூபாய்-யை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமெனவும நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை 15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்தவில்லை என லைகா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleபெண்களே உங்களுக்கு தளர்ந்த மார்பகங்கள் இருக்கின்றதா!!! அதை சரிசெய்வதற்கு இதோ சில டிப்ஸ்!!! 
Next articleஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. ஒரு நாள் ஊதியம் ரூ.10000 ! இன்றே கடைசி நாள்!!