பிக்பாஸ் பிரபலம் திமுகவில் இணைய போகிறாரா?

Photo of author

By CineDesk

பிக்பாஸ் பிரபலம் திமுகவில் இணைய போகிறாரா?

CineDesk

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் பங்கேற்றார். பிக் பாஸின் மூலம் திரையுலகில் தோன்றிய மீரா மிதுன்- க்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தன.
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என்னும் மூன்று படங்களில் மீரா மிதுன் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட மீரா மிதுன் அத்துடன் சேர்ந்து அவர் ஒரு டுவீட் -யையும் வெளியிட்டுள்ளார்.

அவர் டுவிட்டில்
கூறியவாது நாம் இணைந்து புதிய சகாப்தத்தைப் படைப்போம். நாம் இணைந்து வெற்றி பெறுவோம் என எழுதி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் டேக் செய்துள்ளார் மீரா மிதுன்.

இதையடுத்து திமுகவில் மீரா மிதுன் விரைவில் இணையவுள்ளார் எனச் சமூகவலைத்தளங்களில் பலரும் கேள்விகள் எழுப்பி அவர்களுடைய கருத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.