அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி  பரபரப்பு குற்றச்சாட்டு! 

Photo of author

By Amutha

அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி  பரபரப்பு குற்றச்சாட்டு! 

Amutha

அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி  பரபரப்பு குற்றச்சாட்டு! 

பிரதமர் மோடி அதானியை  பாதுகாப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.  மேலும் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரதமர் உரையில் திருப்தி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்

கொரோனா  காரணமாக உலக நாடுகளில் நிலையற்ற தன்மையால் பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை  பெருமளவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலிலும் இந்தியா 5-வது பொருளாதாரமாக உருவெடுத்திருக்கிறது. இதனால் நாட்டு மக்களுக்கு பெருமிதம் இருக்காதா? இந்த சாதனை யாருக்கேனும் வேதனையை தந்திருக்குமானால், அவர்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்தியா வலிமை பெற்று அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. அதன் மீதான நம்பகத்தன்மையும் மேம்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை, நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது எனப் பேசினார்.

மேலும் அவர் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் சாடி இருந்தார்.  2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததாகவும் அந்த ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதானி தொடர்பான குழுமத்தை மேற்கோள் காட்டி 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த மத்தியில் 8 ஆண்டுகளில் அதானி உலக பணக்காரர்களில் இரண்டாவது இடத்திற்கு வந்தார் எப்படி இப்படி ஒரு மாயாஜாலம் மோடி ஆட்சியில் நிறைவேறி உள்ளது.என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் அதானி தொடர்பாக பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி நிறைய கேள்விகள் கேட்டிருந்தார். அதன்படி அதானி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மோடி என்று பதில் அளிப்பார் என்று  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதானி குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை. மக்களவையில் மோடி கூறியது எதுவும் உண்மை இல்லை. அதான் மோடி பாதுகாக்கிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

பின்னர் மக்களவையில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரதமரின் பேச்சு திருப்தி அளிக்கவில்லை. அவரின் பேச்சில் எந்த உண்மையையும் இல்லை. ஷெல் கம்பெனிகள் மற்றும் பினாமி சொத்துக்கள் தேசிய பாதுகாப்பு விவகாரம். இது இந்தியாவின் உள்கட்டமைப்பு தொடர்பானது. இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் வாயை திறக்கவில்லை. அதானி தனது நண்பராக இல்லாவிட்டால் பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பார். இதிலிருந்து அதானியை பிரதமர் தான் பாதுகாக்கிறார் என்பது தெளிவாகிறது. என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.