நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நீட் தேர்வு விளக்கம் பெறுவதில் தாமதம் கூடாது என்றும் கூறியிருந்தார். நேற்று முன்தினம் சென்னை மாவட்டம் சூளைமேட்டை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதமான சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட போது ஒரு கடிதத்தில் நான் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோ என்ற பயத்தினால் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறேன் என்று விளக்கமாக எழுதியிருந்தார்.
மேலும் நீட் தேர்வு எழுதுவதற்கு ஏற்படும் மாற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாகத்தான் மாணவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே இவ்வாறு தொடர்ந்து தற்கொலை நடைபெறுகிறது என்றால் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியான நிலையில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சோகம் தெரிவித்தார்.
மேலும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மிகப்பெரிய சமூக அநீதி. ஆனால் அதனை உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் கூறினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அழிக்க கூறும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்தும் இதற்க்கு தமிழக அரசு தாமதம் காட்டக்கூடாது தமிழகம் முதல்வர் உடனடியாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்துவதற்கு இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்வை எழுத விருப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சம், மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவற்றை போக்குவதற்காக அவர்கள் தொலைபேசி வாயிலாக கவுன்சிலிங் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.