கழுத்து பகுதி மட்டும் கருப்பா அசிங்கமா இருக்கா? இதை செய்தால் சட்டுனு கருமை நீங்கிவிடும்!!

Photo of author

By Divya

சிலருக்கு லட்சணமாக இருந்தாலும் கழுத்து பகுதி கருமையாக இருக்கும்.இதற்கு எண்ணெய் பிசுக்கு,கழுத்து செயின்,டெட் செல்கள் படிதல் போன்றவை காரணமாகும்.இந்த கழுத்து கருமை நீங்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஹோம் ரெமிடியை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓட்ஸ்
2)தக்காளி

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் 20 கிராம் ஓட்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்டாக்கி கொள்ளவும்.

பிறகு அரை தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஓட்ஸ் பேஸ்ட் மற்றும் தக்காளி பேஸ்டை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து ஸ்க்ரப் செய்யவும்.இதை அரை மணி நேரத்திற்கு உலரவிட்டு வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுத்தை சுத்தம் செய்தால் கருமை அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆரஞ்சு பழ தோல்
2)பால்

செய்முறை விளக்கம்:-

ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு காய்ச்சாத பசும் பால் சேர்த்தி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவி சுத்தம் செய்தால் அப்பகுதியில் உள்ள கருமை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)ரோஸ் வாட்டர்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு உலரவிடவும்.அதன் பிறகு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து கழுத்தை சுற்றி துடைத்தெடுத்தால் கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)அரிசி மாவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேருங்கள்.அதற்கு அடுத்து இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கழுத்தை சுற்றி அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்யவும்.பிறகு குளிர்ந்த நீரில் கழுத்தை துடைத்தெடுத்தால் கருமை நீங்கிவிடும்.