முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல் 

0
147

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாலும் முன்னணி மற்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. நடிகர் ரஜிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ரஜினிகாந்திற்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம். கோவிலுக்கு செல்வது, புனித பயணம் மேற்கொள்வது, ஹிமாலயா சென்று யோகிகள், தீர்கதரிசிகளை சந்தித்து அவர்களின் ஆசியை பெறுவது என ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் உள்ள பாண்டி முனி கோவிலுக்கு அருகில் முருகன் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த தகவலில் துளி கூட உண்மை இல்லை என்று ரஜினிகாந்த் அவர்களின் PRO ரியாஸ் கே. அஹமத் தெரிவித்துள்ளார். தலைவர் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் மும்மரமாக பணியாற்றி வருகிறார் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார் ரியாஸ்.

Previous articleஇப்படி பண்ணுவாருன்னு நெனச்சு கூட பாக்கல! எங்களை நம்ப வச்சு ஏமாத்திட்டாரு! முதல்வர் ஸ்டாலினை அட்டாக் செய்த அன்புமணி 
Next articleராமராஜனின் சாதனைகள் ஏராளம்! கலர் கலரா சட்டை போட்டா உங்களுக்கு காமெடியா தெரியுதா?