தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் நாயகி இவரா?? பிரித்து வைத்த ரஜினிகாந்த்!!

0
170
Is she the heroine of the film directed by Dhanush?? Rajinikanth separated!!
Is she the heroine of the film directed by Dhanush?? Rajinikanth separated!!

தனுஷ்  இயக்கி நடிக்கும் படத்தின் நாயகி இவரா?? பிரித்து வைத்த ரஜினிகாந்த்!!

சர்ச்சையில் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார்.

யாரும் எதிர்பாராத வேடங்களில் எல்லாம் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது வசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.

இவர் திரைப்பட நடிகராக தனது பயணத்தை தொடங்கி தற்பொழுது பாடகர் ,பாடலாசிரியர் ,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றார்.

தனுஷ் ஆடுகளம் படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலம் ஆனார்.அதன்பின்பு அவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.

இப்பொழுது தனுஷ்  நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் வாத்தி அதனை  தொடர்ந்து  கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இதன்பிறகு தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி அவரே நடிக்க உள்ளார். இதில் அவருக்கு பிடித்த கதாநாயகி தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் யார் கதாநாயகி என்று கேள்வி வந்து கொண்டே உள்ளது.முதலில் திரிஷா என்றும் அதன்பிறகு சூரரைப் போற்று படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆன அபர்ணா பாலமுரளி என்று கூறினார். இதனை தொடர்ந்து இப்பொழுது  மார்க்கெட்டை இழந்து இருக்கும் ஒரு ஹீரோயின் நடிக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஹீரோயின் உடன் தனுஷ் நடிக்க கூடாது என்று இருவரையும் பிரித்து வைத்திருக்கிறார். இப்பொழுது தனுஷ் தனது மனைவி ஜஸ்வர்யா ரஜினிகாந்த்தை விட்டு பிரிந்து உள்ளார்.

இப்பொழுது சுதந்திர பறவையாக இருக்கும் தனுஷ் தனது படத்தில் அமலா பாலை இணைப்பதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் தனுஷ் தனது படத்திற்குள் அமல பாலை கொண்டு வந்து விடுவார். தனுஷ் உடன் அமலா பால் முதன் முறையாக வேலையில்லா பட்டதாரி படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களுக்கு இடையே நெருக்கமான காட்சிகள் திரையில் மட்டுமல்லாமல் திரை மறைவிலும் இருந்தது.இதனால் சர்ச்சை கிளம்பியது அப்பொழுது ரஜினிகாந்த் அவர்கள் இந்த சர்ச்சையில் ஈடுபட்டு இருவரையும் பிரித்து வைத்தார்.

author avatar
Parthipan K