’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் !

0
136

’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் !

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்குரா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த படத்தின் இயக்குனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்காத நிலையில் இப்போது அதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. இதற்காக பாண்டிராஜ், பேரரசு, வெற்றிமாறன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் இப்போது மற்றொரு இயக்குனரின் பெயரும் அடிபடுகிறது.

இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்துள்ள சுதா கொங்குரா விஜய்க்கும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கும் கதை சொல்லியுள்ளதாகவும் விஜய்க்கு சுதாவின் கதை பிடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் சின்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அரிது. அதிலும் வணிகப் படங்கள் எடுத்து வெற்றி பெற்றவர்கள் அரிதிலும் அரிது. ஆனால் அதை உடைக்கும் வகையில் வரிசையாக மாதவன், சூர்யா, விஜய் ஆகிய உச்ச நடிகர்களை வைத்தும் இயக்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக ஆகியுள்ளார் சுதா கொங்குரா. விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் இவர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலிஸாக உள்ள வேளையில் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Previous articleமுகினின் தந்தை, சாண்டியின் மாமனார்: ஒரே நாளில் இரண்டு சோக நிகழ்வு
Next articleபாமக அறிக்கை மூலம் சுட்டி காட்டியும் கண்டு கொள்ளாத மத்திய அரசு! இனியாவது கவனத்தில் கொள்ளுமா? ராமதாஸ் கோரிக்கை