சருமம் அழகாக நல்ல நிறத்தில் இருந்தாலும் கணுக்கால்,மூட்டு உள்ளிட்ட இடங்களில் கருப்பாக தான் இருக்கிறது.இந்த கருமை நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து பாருங்கள்.
டிப்ஸ் 01:
கணுக்கால்,கை மற்றும் கால் மூட்டு பகுதியில் உள்ள கருமை நீங்க கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம்.இந்த எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கருமையான இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.
டிப்ஸ் 02:
கற்றாழை செடியின் மடலை கட் செய்து அதன் ஜெல்லை தனியாக பிரித்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கருமை உள்ள இடத்தில் அப்ளை செய்து வந்தால் நிறம் மாறும்.
டிப்ஸ் 03:
கிண்ணம் ஒன்றில் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்துவிடுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கணுக்கால்,கை மற்றும் கால் மூட்டுகளில் தடவி உலரவிட்டு சுத்தம் செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.
டிப்ஸ் 04:
கெட்டி தயிர் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சந்தனத் தூள்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கருமையான இடத்தில் பூசினால் கருமை நீங்கும்.
டிப்ஸ் 05:
கடலை மாவு மற்றும் பாசிப்பருப்பு பொடி சம அளவு எடுத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி குழைத்து கணுக்கால்,மூட்டு பகுதியில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.
டிப்ஸ் 06:
பேக்கிங் சோடா மற்றும் கடலை மாவை ஒன்றாக மிக்ஸ் செய்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
பிறகு இதை கணுக்கால்,மூட்டு மற்றும் கை மூட்டுகளின் மீது தடவி நன்கு ஸ்க்ரப் செய்து கழுவினால் கருமை நீங்கிவிடும்.
டிப்ஸ் 07:
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் வெங்காயச் சாறு சம அளவு எடுத்து கணுக்கால் மீது ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.