நம் உடலில் உள்ள பாகங்களில் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.முகம் வெள்ளையாக இருந்தாலும் உடலில் சில இடங்கள் கருமையாக இருக்கக் கூடும்.குறிப்பாக அக்குள்.தொடை இடுக்குகளில் கருமை சற்று அதிகமாகவே இருக்கும்.
அதிக வியர்வை சுரந்து தொடை பகுதிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவ்விடம் கருப்பாக மாறுகிறது.இவ்வாறு உருவான கருமையை நீங்க கீழ்கண்ட குறிப்புகள் உதவும்.
TIPS 01:
*எலுமிச்சை சாறு
*தேன்
இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக மிக்ஸ் செய்து தொடை பகுதியில் தடவி ஸ்க்ரப் செய்து அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் துடைக்கவும்.இவ்வாறு தினமும் குளிப்பதற்கு முன்பு செய்து வந்தால் தொடை கருமை நீங்கும்.
TIPS 02:
*தயிர்
*மஞ்சள்
இந்த இரண்டு பொருட்களை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நன்றாக மிக்ஸ் செய்து தொடை பகுதியில் அப்ளை செய்யவும்.
அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் துணியை நினைத்து பிழிந்து தொடையை துடைக்கவும்.இவ்வாறு செய்தால் தொடை கருமை நீங்கிவிடும்.
TIPS 03:
*தேங்காய் எண்ணெய்
*கற்றாழை ஜெல்
கிண்ணத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி மற்றும் பிரஸ் கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி போட்டு நன்கு மிக்ஸ் செய்து தொடை இடுக்குகளில் தடவி வந்தால் அங்கு உள்ள அசிங்கமான கருமை சீக்கிரம் நீங்கிவிடும்.
டிப்ஸ் 04:
*தேங்காய் எண்ணெய்
*எலுமிச்சை
இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்துக் கொண்டு தொடை பகுதியில் அப்ளை செய்யவும்.சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான நீர் பயன்படுத்தி தொடையை சுத்தம் செய்யவும்.இந்த டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வந்தால் தொடை கருமை நீங்கும்.
டிப்ஸ் 05:
*பப்பாளி துண்டு
*எலுமிச்சை சாறு
ஒரு கீற்று பப்பாளி பழத்தை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து தொடை பகுதியில் தடவி வந்தால் கருமை நீங்கும்.