24 மணி நேரமும் செயல்படும் வங்கியா? புதிய  வசதி அறிமுகம்!

24 மணி நேரமும் செயல்படும் வங்கியா? புதிய  வசதி அறிமுகம்!

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அவரவர் தேவைக்கு ஒவ்வொரு முறையும் வங்கிக்கு செல்வதாக உள்ளது. இந்த நிலையை குறைக்கும் விதமாக பாரத ஸ்டேட் பேங்க் ஆனது புதிய திட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தின் மூலம் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அனைவரும் 24 மணி நேரமும் தங்களின் வங்கி சேவையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது. திட்டத்தினை அனைவரும் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என பாரத் ஸ்டேட் வங்கி இரண்டு கட்டணம் இல்லாத புதிய எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் தங்களின் அனைத்து விதமான சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. எஸ்பிஐ தொடர்பு மையங்களில் 1234 அல்லது 1800 2100 என்ற கட்டணமில்லாத இலவச எண்னை  பயன்படுத்தி உங்கள் வங்கிக்கு உரிய எதையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டமானது உங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகையை காண்பதற்கு எண்னை தொடர்பு கொண்டால் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வந்துவிடும். காசோலை புத்தகங்கள் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட என்னை தொடர்பு கொண்டால் உடனடியாக உங்களுக்கு காசோலை அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

 ஏடிஎம் கார்டுகள் தொலைந்தால் அதனை பிளாக் செய்யவும் மற்றும் புதிய ஏடிஎம் கார்டை பெறுவதற்கும் மேற்கண்ட என்னை தொடர்பு கொண்டால் உடனடியாக செய்து தரப்படும் என  ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது. மேலும் 91-8294710946 அல்லது 91-7362951973 எண்ணில்லிருந்து அழைப்பு வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டேட்பேங்க் தகவல் ஒன்றை கூறியுள்ளது.

Leave a Comment