மூக்கின் மீதுள்ள BLACKHEAD-ஆல் அழகு குறைஞ்சிடுச்சா? இதை எளிதில் நீக்க ஹோம் மேட் க்ரீம் அப்ளை பண்ணுங்க!

Photo of author

By Divya

மூக்கின் மீதுள்ள BLACKHEAD-ஆல் அழகு குறைஞ்சிடுச்சா? இதை எளிதில் நீக்க ஹோம் மேட் க்ரீம் அப்ளை பண்ணுங்க!

உங்கள் மூக்கின் மேல் பகுதியில் ஒருவகை பருக்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.அவை மூக்கின் மீது எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தாலோ,அதிகளவு இறந்த செல்கள் தேங்கினாலோ ஏற்படக் கூடிய கரும்புள்ளிகள் ஆகும்.

சிலர் இதை அகற்ற பார்லர் செல்வார்கள்.சிலர் கைகளால் மூக்கை அழுத்தி அந்த கரும்புள்ளிகளை அகற்ற முயற்சிப்பார்கள்.ஆனால் இதையெல்லாம் செய்வதால் கரும்புள்ளிகள் முழுமையாக நீங்கி விடுமா? என்றால் எளிதில் நீங்காது என்பது தான் பதில்.

முகத்தை அடிக்கடி கழுவி எண்ணெய் பிசுபிசுப்பு இல்லமால் வைத்துக் கொள்ள வேண்டும்.கைகளை கழுவிட்டு விட்டு அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதால் கரும்புள்ளிகள் மறையும்.சிலருக்கு முகம் அழகாக இருக்கும்.ஆனால் கரும்புள்ளிகள் அந்த அழகை கெடுக்கும் விதமாக இருக்கும்.

சிலர் முகத்தை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வார்கள்.ஆனால் மூக்கு பகுதியை மட்டும் கண்டு கொள்ள மாட்டார்கள்.மூக்கின் மேல் மற்றும் அதன் இடது மற்றும் வலது பக்கத்தில் அதிகளவு அழுக்கு சேர்வதாலும் கரும் புள்ளிகள் உருவாகிறது.இந்த கரும்புள்ளிகள் கண்ணுக்கு தெரியாது என்று அலட்சியமாக விட்டால் அவை அதிகளவு வரத் தொடங்கிவிடும்.

மூக்கின் மேல் இருக்கின்ற கரும்புள்ளிகளை அகற்ற கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.இரவில் தேவையான அளவு பிரஸ் கற்றாழை ஜெல் எடுத்து மூக்கின் மீது அப்ளை செய்து கைகளால் மசாஜ் செய்து விட்டு காலையில் முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

பச்சரிசி மாவுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை மூக்கின் நுனியில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதினால் மூக்கின் மீதுள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.