ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா?? தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!!

Photo of author

By Parthipan K

ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா?? தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!!

Parthipan K

Is the budget of a show so much?? Bigg Boss season 7 is about to start!!

ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா??  தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!!

விஜய் டிவில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியை பார்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்கி 6 சீசன் முடிவடைந்துள்ளது.தற்பொழுது சீசன் 7 தொடங்க உள்ளது.

கமல் வெள்ளித்திரையில் இருந்து இந்த சின்ன திரைக்கு தொகுப்பாளராக வந்துள்ளார் என்பதால் இவரின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று ரசிகர்களிடையே எப்பொழுதும் கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.

கமல் எப்பொழுதும் தனக்கு ஒய்வு கொடுக்காமல் எதையோ ஒன்று செய்து கொண்டே இருப்பார். அப்படி தான் இந்த பிக் பாஸ் என்கின்ற நிகழ்ச்சியிலும் தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியானது சீரியலை காட்டிலும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று தொலைக்காட்சியின்  டிஆர்பயையும் ஏற்றி கொடுத்தது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் இது தான் நல்ல ரேட்டிங்கை பெற்றது. அதில் தற்பொழுது சீசன் 7 தொடங்க உள்ளது.அந்த நிலையில் இதில் யார் கலந்து கொள்ள போகின்றார் என்று ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலகளின் குணா அம்சங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஒன்றை விஜய் டிவி அளித்திருகின்றது .

இந்த பிக் பாஸ் சீசன் 7 ஆனது அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி பல லட்ச பார்வையாளர்களை வைத்து இருக்கிறது.இந்த சீசனை 106 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன் சேர்த்து சுமார் 150 கோடி பட்ஜெட்டில் இந்த நிகழ்ச்சி உருவாக உள்ளது.