இப்பொழுது எல்லா வீடுகளிலும் சீலிங் ஃபேன் பயன்பாடு அதிகமாக உள்ளது.மழை,வெயில்,குளிர் என்று அனைத்து பருவ காலங்களிலும் சீலிங் ஃபேன் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.சிலருக்கு ஃபேன் ஆனில் இருந்தாலே மட்டுமே தூக்கம் வரும்.
குளிர் மற்றும் மழை காலத்தில் வேகமாக இயங்கும் சீலிங் ஃபேன் வெயில் காலத்தில் மட்டும் போதுமான காற்றை நமக்கு வழங்குவதில்லை.பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் ஃபேன் வெப்பக்காற்றையே நமக்கு வழங்குகிறது.ஏசி,ஏர் கூலர் போன்ற குளிர் காற்று தரும் சாதனங்கள் இருந்தாலும் கொளுத்தும் கோடை காலத்தில் சீலிங் ஃபேனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
கோடை காலத்தில் சீலிங் ஃபேன் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்:
1)சீலிங்கை ஃபேனில் தூசி இருந்தால் அதன் வேகம் குறையும்.எனவே ஃபேனை ஆப் செய்துவிட்டு ஒரு ஈரத் துணி பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.நீண்ட நேரம் ஃபேன் இயங்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஃபேன் அதிக நேரம் இயங்கினால் சூடாகி வெப்பக்காற்றை வழங்கும்.எனவே நீண்ட நேரம் ஃபேன் காற்று பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
2)சீலிங் ஃபேன் வேகத்தை அதிகரிக்க கண்டென்ஸரை மாற்றலாம்.ஃபேனின் மேல் அதாவது மோட்டாருக்கு அருகில் கண்டென்ஸர் இருக்கும்.இந்த பழைய கண்டென்ஸரை அகற்றிவிட்டு புதியவற்றை இணைக்க வேண்டும்.இப்படி செய்தால் சீலிங் ஃபேன் வேகம் அதிகரிக்கும்.
3)மதிய நேரத்தில் மட்டும் சீலிங் ஃபேன் பயன்படுத்துங்கள்.காலை நேரத்தில் முடிந்தவரை ஃபேன் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.