களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்!
கடந்த வருடம் ஆட்சியிலிருந்த முதல்வரை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததாக எஸ்.வி சேகர் மீது ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இவர் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி சேகர் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யுமாறு எஸ்.வி சேகர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் எஸ்.வி சேகர் கூறியது,எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சால்வை போர்த்திய செயலை களங்கம் என தெரிவித்த முதல்வர் களங்கமான தேசியக் கொடியை ஏற்ற போகிறாரா என கேள்வி எழுப்பியதாகவும் கோரினார்.நான் தேசியக்கொடியை ஒருபொழுதும் அவமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்ய எஸ்.வி சேகரை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் கூறியுள்ளது.அதற்கும் விலக்கு அளிக்குமாறு அவர் தற்பொழுது சென்னை நீதிமன்றத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விசாரணையானது நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது.அதில் அவர் கூறியது, புகார் அளித்தவரை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி எஸ். வி சேகர் தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.அடுத்த வாரத்தில் நடக்கப்போகும் இந்த வழக்கில் எஸ்.வி சேகர் அளித்த மனுவை தள்ளுபடி செய்யப்படுமா எனபது தெரிய வரும்.இவர் கூறியது அனைத்தும் யூடுப்பில் உரைத்தது எனபது குறிப்பிடத்தக்கது.