திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா!
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கு அதன் கூட்டணி கட்சிகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. என்னதான் வெளியில் இருந்து பார்க்கும் போது திமுக கூட்டணி மிகவும் ஒற்றுமையாகவும், பலமாகவும் இருப்பது போல தோன்றினாலும், உள்ளே பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. கூட்டணியில் இருக்கும் விசிகவினரை திமுக ஒதுக்குவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விசிகவை பிரச்சாரம் செய்ய அனுமதிக்காத விவகாரம் பிரச்சனையானது. பாமக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய முயற்சிப்பதாகவும் பல தகவல்கள் வெளியானது. அதேபோல விசிகவும் அதிமுக பக்கம் சேர முயற்சித்து வருகிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் பிரச்சனைகள் வெட்ட வெளிச்சத்திற்கு தற்போது வந்துள்து. அதுவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனே அதனை மேடையில் போட்டு உடைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மிகவும் ஆக்ரோஷமாக பேசும் திருமாவளவன், கொடி ஏற்றுவதே எங்களுக்கு ஒரு சிக்கலாக உள்ளது. கூட்டணி கட்சிக்காரனே எங்கள் கொடியை ஏற்ற விட மாட்டான். கூட்டணியில் இருப்பதற்காக நாங்கள் அவர்களை தோலில் தூக்கி சுமக்கிறோம். ஆனாலும், அவர்களுக்கு எங்கள் கொடி என்றால் கசக்கும், ஆனால் எங்கள் ஓட்டு மட்டும் இனிக்கும் என்று மிகவும் காட்டமாக பேசியுள்ளார். கூட்டணிகாரனே கொடியேற்ற விட மாட்டான் என்று திருமாவளவன் பேசியதை வைத்து திமுக கூட்டணியில் இருக்கும் பிரச்சனை அப்பட்டமாக தெரிகிறது. இதனையடுத்து திமுக-விசிக கூட்டசி உடையப் போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.