அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும், ஜேஜே கட்சியின் நிறுவனருமான, ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் 1000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிர்க்கவோ, மறுக்கவோ, இல்லை ஆகவே இவ்வளவு பெரிய தொகை அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சுருட்டியதாகத்தான் இருக்க முடியும்.
அதாவது மக்கள் வரிப்பணத்தை அவர்கள் சுருட்டி இருக்கிறார்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோருக்கிடையே நடைபெற்று வரும் மோதல் காரணமாக, பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து அந்த கட்சிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் 28ஆம் தேதி மனு அனுப்பினேன்.
இதுவரையில் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. ஆகவே என்னுடைய மனுவை பரிசோதனை செய்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரன்நாத் பண்டாரி, நீதிபதி என் மாலா, உள்ளிட்டோர் முன்பு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.