தல தோனிக்கு 41 அடி உயர கட்டவுட்! ரசிகர்கள் அசத்தல்!

0
58

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 41வது பிறந்தநாள் இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். சமூக வலைதளத்தை திறந்தாலே அவருடைய வாழ்த்து மழை தான் என்று சொல்லப்படுகிறது.

கேப்டன்சியை பொறுத்தவரையில் இவருக்கு தனித்திறமை இருக்கிறது. அதிலும் உலகளவில் சிறந்த பினிஷர் உட்பட கிரிக்கெட் உலகத்தின் பல சாதனைகளை இவர் படைத்திருக்கிறார். இதன் காரணமாக, அவரை ரசிகர்கள் தற்போது வரையில் கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கடுத்தபடியாக அவருக்கு 41 வயதான நிலையில், அதே உயரத்தில் கட்டவுட் வைத்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள். அவருடைய ரசிகர்கள் நடிகர்களுக்கு தான் கட்டவுட் வைக்க வேண்டுமா?. இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த தோனிக்கு வைப்பது சரிதானே என தெரிவிக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

விஜயவாடா மாவட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் முன்னாள் இந்திய அணியின் கேப்டனை கௌரவிக்கும் விதத்தில் தோனியின் ரசிகர்கள் அவருக்கு 41 அடி கட்டவுட்டை வைத்து வியக்க வைத்திருக்கிறார்கள்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் அவர் அடித்த கடைசி வெற்றி சிக்ஸர் தான் கட்டவுட்டில் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி கடைசி இடத்திற்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.