திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!!
திமுக தேர்தல் அறிக்கையில் வடலூர் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். அந்த வகையில் இன்று வள்ளலார் முப்பெரும் விழாவை,இந்து சமய அறநிலை துறை சார்பில் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பிறந்தநாளையும் சமூக நீதி நாளாகவும், சமத்துவ நாளாகவும் அறிவித்தது திமுக தான் என்று கூறினார். அந்த வரிசையில் தற்போது வள்ளலார் பிறந்த நாளையும் தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துள்ளோம்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். ஏனென்றால் திமுக என்றாலே ஆன்மீகத்திற்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் நாங்கள் எப்பொழுதும் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மதத்தை வைத்து பிழைப்பு நடத்தவர்கள் சிலர் உள்ளனர். அவர்களைப் போல் நாங்கள் அல்ல. இந்த ஆன்மீகத்தை தங்களின் சொந்த உயர்வுக்காக பயன்படுத்துபவர்களுக்கு எதிரானது தான் திமுக அரசு என்று கூறினார். மேலும் இறைவன் ஒருவனே இறைவன் ஜோதி மயமாக இருக்கிறான் என்ற வரிகளுக்கு இணங்க வள்ளலார் வாழ்ந்த மண் இது.
அதைப்போல தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தையும் அண்ணா அவர்கள் கூறினார். தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியது போல, வடலூர் வள்ளலாருக்கு சர்வதேச மையம் 100 கோடி மதிப்பில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும். அதுமட்டுமின்றி வள்ளலாரின் பிறந்த நாளை ஒட்டி ஒரு வருடத்திற்கு அன்னதானமும் வழங்கப்படும். அதற்காக மூன்று கோடியை ஒதுக்கியுள்ளோம்.இந்த திராவிட மாடல் ஆட்சியானது மக்களின் பசிப்பிணியை போக்கி அறிவு பசிக்கு தீனி வழங்கும் என கூறினார். அமைச்சர் சேகர்பாபு குறித்து புகழாரம் பேசினார்.