ஈபில் டவர் அளவு உயரம் கொண்ட சிறுகோள் பூமியைத் தாக்கப் போகிறதா!!

Photo of author

By Parthipan K

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நாஸ்டர்டாமஸ், இவரை ஒரு தீர்க்கதரிசி என்றே கூறலாம்.இவர் கி.பி.3797 ஆம் ஆண்டு வரையில் உலகில் என்னவெல்லாம் நடக்கப் போகும் என்ற எதிர்காலம் குறித்த நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார்.

இவர் இவ்வாறு எதிர்காலம் குறித்த நிகழ்வுகளாக ஏறத்தாழ 6,338 கணிப்புகளை கணித்துள்ளார். இவற்றில் 3,797 கணிப்புகள் இதுவரை உண்மையாகியுள்ளது.தற்போது கூட சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பற்றி அவர் கணித்த கணிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இப்படி இவர் கணித்த பல கணிப்புகள் உண்மையாகி உள்ள நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈபிள் டவரை விட உயரமான சிறுகோள் பூமியின் மீது தாக்குதல் ஏற்படுத்தும் என கணித்துள்ளார். இச்செய்தி மக்கள் பலரிடையே பயத்துடன் கூடிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி அன்று 220 மீட்டர் உயரம் கொண்ட சிறுகோள் பூமியை கடந்து சென்றதாக நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. தற்பொழுது “2012 சிஓ 247” எனப்படும் ஈபிள் டவரை விட 7.83 மடங்கு உயரமான சிறுகோள் 74 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை கடந்து செல்லும் என தகவல்கள் நாசா விண்வெளி மையத்தில் இருந்து வெளியாகியுள்ளன.

இதில் ஜனவரி 3ஆம் தேதியன்று பூமியை கடந்து சென்ற சிறுகோள் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து கடந்து சென்றதாக கூறியுள்ள நாசா, ஆண்டுக்கு பல முறை இதுபோன்ற சிறுகோள்கள் பூமியை கடந்து செல்வதாகவும் கூறியுள்ளது.

பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை தவிர பிற சிறுகோள்களை பதிவு செய்வது மிகவும் கடினம் எனவும்,அந்நிலையில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவ்வப்போது கண்காணிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.