அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா?

Photo of author

By Sakthi

அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா?

அயோத்தி ராமர் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் நாள் காணிக்கை குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.

ஆலயத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக வெகு விமர்சியாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பல பக்தர்கள் ஆலயத்தில் ராமர் கும்பாபிஷேக திருவிழாவிற்கு சென்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு முதல் பூஜை செய்தார். அதன் பின்னர் பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி 23ம் தேதி முதல் பக்தர்கள் ஆலயத்தில் ராமர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி வழங்கப்பட்ட முதல் நாளில் 5 லட்சம் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்தனர். இதையடுத்து தற்பொழுது அயோத்தி ராமர் கோயிலின் முதல் நாள் காணிக்கை குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.

நேற்று முன் தினம் அதாவது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட முதல் நாளான ஜனவரி 23ம் தேதி மட்டும் தரிசனம் செய்த பக்தர்கள் பால ராமர் கோயிலுக்கு 3 கோடியே 17 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருக்கின்றனர்.