முகத்தில் சதை தொங்குதா? தேவையற்ற கொழுப்பு குறைய.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

முகத்தில் சதை தொங்குதா? தேவையற்ற கொழுப்பு குறைய.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Divya

உடல் எடை அதிகமான இருப்பவர்களுக்கு உடலில் கை,கால்,தொடை,வயிறு,இடுப்பு உள்ளிட்ட இடங்களில் தசைகள் பெரியதாக இருக்கும்.சிலருக்கு முகத் தாடையில் அதிக தசைகள் தொங்கும்.உடல் குண்டாக இருப்பவர்கள் மற்றும் ஒல்லியாக இருப்பவர்கள் யாருக்கு வேண்டுமெனாலும் முகத்தில் தசைகள் அதிகரிக்கலாம்.

இது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமின்றி நம் முக தோற்றத்தை முழுமையாக பாதிக்கச் செய்து விடும்.நாம் உட்கொள்ளும் உணவுகளால் தான் உடலில் அதிகப்படியான கொழுப்பு உருவாகிறது.ஒருமுறை உடல் எடை அதிகரித்துவிட்டால் அதை குறைப்பது மிகவும் கடிமான விஷயமாக மாறிவிடும்.முகத்தில் அதிகப்படியான கொழுப்பு படிந்தால் கன்ன சதைகள் தளர்ந்து தொங்க ஆரம்பித்துவிடும்.

இப்படி இருந்தால் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைந்துவிடுவோம்.முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைய சில டிப்ஸை பின்பற்றலாம்.

1)தண்ணீர்

தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் தான் முகத்தில் கொழுப்பு அதிகமாகிறது.

2)ஹெல்தி புட்

பச்சை இலை காய்கறிகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் முகத்தில் அதிகரித்துள்ள கொழுப்பு கரையும்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அளவு குறையும்.

3)முகத்திற்கு மசாஜ்

கன்னம் மற்றும் தாடைகளில் காணப்படும் அதிகப்படியான சதையை குறைக்க ஆயில் மசாஜ் செய்யலாம்.அதேபோல் வாயில் சூயிங் கம் போட்டு நன்றாக வாய் அசைத்து மெல்லுதல்,வாயை அசைப்பது,சிரிப்பது போன்ற செயல்கள் மூலம் கன்னம் மற்றும் தாடை சதையை குறைக்கலாம்.குளிக்கும் பொழுது கன்னம் மற்றும் தாடைகளை அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும்.

4)தூக்கம்

நமது உடலுக்கு ஓய்வு கொடுக்க நிச்சயம் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் உடல் முக அழகு பாதிக்கப்பட்டுவிடும்.கண்களுக்கு கீழ் கருவளையம் உருகி தசைகளில் தளர்வை ஏற்படுத்திவிடும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1)பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2)அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

3)எண்ணையில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.மோசமான உணவுப் பழக்கத்தை கைவிட வேண்டும்.