ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு தலைவர் ரெஸ்ட் எடுக்க போறாராம்? காரணம் இதுதான்!!

0
34
Is the leader going to take a rest after Jailer 2? This is the reason!!
Is the leader going to take a rest after Jailer 2? This is the reason!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தலைவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்து விட்டார். படம் 14 ஆகஸ்ட் 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயிலர் 2 படபிடிப்பு முடிந்த பிறகு 6 மாதம் ரஜினிகாந்த் ஓய்வெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் 2 படபிடிப்பு முடிந்தவுடன் 6 மாதகாலம் ஓய்வெடுத்து தன்னை பற்றிய சுயசரிதை தலைவர் எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுக்கு முக்கிய காரணம் என்ன வென்றால் ஜெயிலர் 2 படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த் Red Giant நிறுவனத்திற்காக ஒரு இடத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியான திமுக பேனரில் படத்தில் நடித்தால் அது தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சனை வந்துவிடுமோ என ரஜினிகாந்த் நினைப்பதாவதும், எதுவா இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகவும் திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

Previous article19 வருட கண்டுபிடிப்பு.. AI மூலம் கருத்தரித்த முதல் பெண்!! கொலாம்பிய பல்கலைக்கழகம் சாதனை!!
Next articleமாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் ஆபர்; உடனே விண்ணப்பிக்கலாம்!!