புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல் படுத்தப் படுகிறதா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் என்ன?

Photo of author

By Parthipan K

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை திட்டத்தினை தமிழகத்தில் அமல்படுத்த ஆலோசனை கூட்டம் இன்று தற்போது தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

 

இந்தக் கூட்டத்தின் வாயிலாக, புதிய கல்விக் கொள்கையின் படி, இரு மொழிக் கொள்கைக்கு மாற்றாக மும்மொழிக் கொள்கை, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு என முக்கியமான ஆலோசனைகள் கலந்தலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய கல்விக்கொள்கை திட்டத்தினை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.