ஒரு மீனின் விலை இவ்வளவு லட்சங்களா? அப்படி என்ன அபூர்வம் இதில்!
மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளதல் இந்த மீனுக்கு இவ்வளவு விலையாம். மிக அரிய வகை மீனான குரோக்கர் ரக மீன் பாகிஸ்தானியர் ஒருவரின் வலையில் சிக்கி ரூ.7.8 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகளவு பயன் பாட்டில் உள்ளது.
குரோக்கர்ரக மீன் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இந்த மீனில் காணப்படும் ஏர் பிளாடர் என்ற பகுதி மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது அறுவை சிகிச்சை முடிந்ததும் தையல் போடப்படும் போது பயன்படும். இதை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் பக்கவிளைவுகளின்றி காயம் குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகளின் போது இதை பயன்படுத்தினால் காயம் வெகு சுலமாக ஆறுவது மட்டுமில்லாமல் பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்குமாம். இதை பயோடெக்னாஜி இன்பர்மேஷன் ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக குரோக்கர்ரக மீன்களில் மஞ்சள் க்ரேக்கர் ரக மீன்களில் தான் அதிகம் மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மீன் கேன்சர் வியாதி அதிகம் பரவாமல் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மீன் மிகப்பெரிய மருந்தாக இருக்கிறது. குறிப்பாக அவர்களின் வாழ்நாளையே அதிகரிக்கும் குணம் இந்த மீனிற்கு இருப்பதாகவும் டாக்டர்கள் சொல்கின்றனர். இந்த மீன் மனிதர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகளை சரி செய்யவும் பயன்படுகிறது.