சருமம் கருமையான தோற்றத்தில் உள்ளதா… அப்போ இதை டிரை பண்ணி பாருங்க…
நம்மில் பலருக்கு கருமையான தோற்றம் கொண்ட சருமம் உள்ளது. இதனை எவ்வாறு வெள்ளை நிறமாக மாற்றுவது அதற்கான வழிமுறை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு நாம் அதிக சிகிச்சை முறைகளை செய்து பார்த்திருப்போம். பல மருந்துகளையும் மாத்திரைகளையும் லேசர் வைத்திய முறைகளையும் செய்திருப்போம். இறுதியாக நமக்கு பக்க விளைவுகள் வருவது தான் முடிவாக இருக்கும்.
இந்த பதிவில் பக்க விளைவுகள் இல்லாமல் கருமையாக இருக்கும் சருமத்தை எவ்வாறு வெள்ளையாக மாற்றுவது அதற்கு என்ன மருந்து தயாரிப்பது அந்த மருந்துக்கான பொருள்கள் என்ன எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
மருந்து தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* பாலாடை
* கட்டியான தயிர்
* தேங்காய் துருவல்
* பேபி ஆயில்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எடுத்து வைத்துள்ள பாலாடையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த மூன்றையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இதில் பேபி ஆயில் சிறிதளவு கலந்து பின்னர் இறுதியாக நன்கு கலந்து கொண்டால் சருமத்திற்கு பொலிவு தரும் சருமத்தை வெள்ளையாக்கும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை எடுத்து சருமத்தில் முகத்தில் தேய்க்க வேண்டும். அவ்வாறு இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும். வெள்ளையாக மாறும்.