நாம் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப் இத்தனை ஆபத்துக்கள் நிறைந்தவையா?

Photo of author

By Divya

நாம் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப் இத்தனை ஆபத்துக்கள் நிறைந்தவையா?

Divya

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்த கடையில் இருந்து சோப்,லிக்விட் போன்றவற்றை அதிகம் வாங்குகின்றோம்.இந்த கெமிக்கல் பொருட்களால் நமது தோலில் அரிப்பு,எரிச்சல்,வெடிப்பு போன்ற ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

இந்த பாதிப்பில் இருந்து மீள நீங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள சோப் செய்முறையை பின்பற்றி சருமத்தை பாதிக்காத சோப் செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பாமாயில் – 3 கப்
2)காஸ்டிக் சோடா – ஒரு கப்
3)தண்ணீர் – ஒன்றரை கப்
4)எசன்ஷியல் ஆயில் – ஒரு தேக்கரண்டி
5)புட் கலர் – சிறிதளவு
6)சபீனா – அரை கப்
7)சோப் மோல்ட் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் அளவிற்கு காஸ்டிக் சோடா எடுத்து எவர் சில்வர் பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு ஐந்து நிமிடங்களுக்கு கலந்துவிட வேண்டும்.

காஸ்டிக் சோடா நன்றாக கரைந்த பிறகு மூன்று கப் பாமாயில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பாமயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.

பிறகு இதை 10 நிமிடங்கள் வரை கலக்க வேண்டும்.இப்படி செய்தால் கஞ்சி பதத்திற்கு வந்துவிடும்.

அடுத்து விருப்பம் இருந்தால் இதில் வாசனைக்காக எசன்ஷியல் ஆயில் ஒரு மூடி சேர்த்து கலக்கலாம்.அதேபோல் சோப் நிறம் வர புட் கலர் பயன்படுத்தலாம்.அதன் பிறகு அரை கப் அளவிற்கு சபீனா சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு சோப் மோல்ட் எடுத்து தயாரித்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி 10 மணி நேரம் வரை காயவிட வேண்டும்.இந்த சோப்பை 30 நாட்களுக்கு பிறகு பாத்திரம் துலக்க பயன்படுத்தலாம்.

இந்த பாத்திரம் துலக்க பயன்படும் சோப்பால் நமது கைகளுக்கு எந்தஒரு பிரச்சனையும் வராது.நாம் கடைகளில் வாங்கும் சோப்பைவிட வீட்டில் செய்து பயன்படுத்தும் சோப் கைகளின் ஆரோக்கியத்தை பாதிக்காது.