உதவித்தொகை உயர்கின்றதா? பெண்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!! 

Photo of author

By Rupa

 

பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருப்பதாக அமைச்சர் சி.வி கணேசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த தகவல் தற்பொழுது பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழக அரசு தற்பொழுது பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. இந்த நலத்திட்டங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் விடியல் பயணம் என்ற திட்டம் மூலமாக பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதன்  மூலமாக மாதம் 1500 ரூபாய் வரை சேமிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. மேலும் கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

அதே போல பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கும் 50000 ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. அதே போலபெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் மானியத்துடன் நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் ஒன்றையும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

அதே போல அரசு பள்ளியில் பயிலும் பெண்களுக்கு புதுமைப் பெண் என்ற திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. அதே போல பெண்கள் திருமணத்திற்கு உதவும் வகையில் தமிழக அரசு தற்பொழுது படிக்காத இளம் பெண்களின் திருமணத்திற்கு 25000 ரூபாய் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் டிகிரி வரை படித்த பெண்களின் திருமணத்திற்கு 50000 ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் சி வி கணேசன் அவர்கள் தற்பொழுது பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

தற்பொழுது சென்னையில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 80வது கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி கணேசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பெண்களுக்கான உதவித் தொகை குறித்த தகவலையும் தெரிவித்தார்.

தொழிலாளர் நல வாரியத்தின் கூட்டத்தில் அமைச்சர் சி.வி கணேசன் அவர்கள் “சென்னை, குற்றாலம், மாமல்லபுரம், வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. அவை அனைத்தும் விரைவில் திறப்படவுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தின் பயன்களை அதிகமான தொழிலாளர்கள் பெறும் வகையில் ஊதிய உச்ச வரம்பானது 25000 ரூபாயாக இருந்தது. அது தற்பொழுது 35000 ரூபாயாக உயர்த்தப்படுகின்றது.

திமுக கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிலாளர் நல வாரியம் வழியாக 30134 தொழிலாளர்களுக்கு 12.54 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழங்கப்படவுள்ளது.

திருமண உதவித் தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண உதவித்தொகை 10000 ரூபாய் கடந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி 20000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித் தொகை 25000 ரூபாயாக வழங்கப்படவுள்ளது” என்று கூறியுள்ளார்