பாத்திரம் இன்னொரு பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதா? ஈசியாக எடுக்கும் வழிமுறை!

0
316
#image_title

ஒரு பாத்திரத்தை போலவே இன்னொரு பாத்திரம் நாம் வைத்திருந்தோம் என்றால் ஒன்றாக அதை சேர்த்து வைத்திருப்போம். அப்படி சேர்த்து வைக்கும் பொழுது ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்திற்குள் சிக்கிவிடும். நம்மளால் எவ்வளவு முயற்சி செய்தும் அதை எடுக்காமல் போய்விடும். ஆனால் அதை எடுப்பதற்கான ஒரு ஈஸியான வழிமுறை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

 

1. இதற்கு இரண்டு கட்டு கம்பிகள் தேவை

2. சிறிதளவு கயிறு தேவை

 

 

செய்முறை:

 

1. ஒன்றாக சிக்கிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. இப்பொழுது ஒரு கட்டு கம்பியை எடுத்துக்கொள்ளவும்.

3. இரண்டாக மடித்து கடைசியில் முனைப்பகுதியில் இருந்து ஒரு அரை அடி அளவு விட்டு நன்றாக முறுக்கிக் கொள்ளவும்.

4. இப்பொழுது அந்தப் பாத்திரத்தின் இடைப்பட்ட கேப்பில் கட்டுக் கம்பியை வைத்து நன்றாக டைட்டாக முறுக்கிக் கொள்ளவும்.

5. இப்பொழுது இரண்டு பக்கமும் மிஞ்சி இருக்கும் கம்பியை ஒன்றாக சேர்த்து முறுக்கிக் கொள்ளவும்.

6. அதேபோல் இன்னொரு கட்டுக் கம்பியை எடுத்து அதேபோல் இரண்டு புறமும் முறுக்கிக் கொள்ளவும்.

7. இப்பொழுது இரண்டு புறமும் கட்டுக் கம்பிகள் மீதம் இருக்கிறது அல்லவா அதை பின்புறமாக இணைத்து முறுக்கிக் கொள்ளவும்.

8. இப்பொழுது ஒரு கயிறை எடுத்துக் கொள்ளுங்கள். பின்புறமாக கம்பியை முறுக்கி இருக்கும் அல்லவா அதனுடன் ஒரு கயிறை கட்டிக் கொள்ளுங்கள்.

9. இந்த கயிற்றின் ஒரு பகுதியை ஒரு மரம் அல்லது கம்பி வீட்டில் இருந்தால் டைட்டாக அந்த கம்பியுடன் சேர்த்து கட்டிக் கொள்ளுங்கள்.

10. பாத்திரத்தின் முன்புறம் ஒரு கயிறை கட்டி இழுத்தீர்கள் என்றால் உடனடியாக பாத்திரம் வெளியே வந்து விழுந்துவிடும்.

11. உங்க வீட்டு டம்ளரும் இதே போல் சிக்கிக் கொண்டால் இதே வழிமுறையை கொண்டு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

Previous article10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! முந்துங்கள்! 20000 சம்பளம்!
Next articleமுடி வளரவே வளராது என நினைச்சுட்டு இருக்கீங்களா? இத பண்ணுங்க 100% ரிசல்ட்!