ஆன்லைன் மதுபான விற்பனைக்கு தடையா? வழக்கு குறித்து நீதிபதிகள் விளக்கம்!!
கடந்த மே 7 ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு முன் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை மீறி உள்ளதாக கூறி டாஸ்மார்க் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டது.
டாஸ்மாக் திறப்பது குறித்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் குறிப்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் இந்த சூழலில் மதுபான கடைகளை திறந்தால் பெரிய பாதிப்பு நேரிட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மதுரை நுகர்வோர் அமைப்பு பொதுச் செயலாளர் சிங்கராஜ் என்பவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டாஸ்மாக் கடைகளை மூட அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் விற்க மதுபானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் அதன் முடிவை பொறுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி