காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய்!! பரப்புரையில் ராகுல் காந்தி அவர்கள் பேச்சு!! 

Photo of author

By Sakthi

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய்!! பரப்புரையில் ராகுல் காந்தி அவர்கள் பேச்சு!!
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய் வழங்கப்படும் என்று பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் மே 13ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஒடிசா மாநிலம் சாலிபூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்பொழுது பேசிய ராகுல் காந்தி அவர்கள் “இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நாட்டில் இருக்கும் ஏழைக் குடும்பங்களின் தரவுகள் சேகரிக்கப்படும். பின்னர் அந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 8500 ரூபாய் வழங்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்து 22 கோடிஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கார்ப்ரேட் நிறுவனங்கள் வாங்கிய 16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடியும் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக கட்சியின் ஆட்சியில் கோடிஸ்வரர்களின் செத்து மதிப்பு மட்டுமே மேலும் உயர்ந்துள்ளது. ஆனால் பாஜக போல அல்ல. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேரை நாங்கள் லட்சாதிபதியாக மாற்றுவோம்” என்றும் ராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தி அவர்களின் வருகை குறித்தும் அவருடைய பேச்சு குறித்தும் பிஜூ ஜனதாதளம் கட்சி விமர்சனம் செய்துள்ளது. ராகுல் காந்தி அவர்களின் வருகை குறித்து பிஜூ ஜனதாதளம் கட்சி “ராகுல் காந்தி அவர்களின் பேச்சு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை மட்டுமே மகிழ்ச்சி அடையச் செய்யும். அவருடைய பேச்சோ அல்லது வருகையோ ஒடிசா மாநிலத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று விமர்சனம் செய்துள்ளது.