கார்த்திகை மாதம் வீட்டில் விளக்கேற்றும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த விஷயத்தை கவனியுங்கள்!!

0
114
Is there a habit of lighting lamps at home in the month of Karthikai? So watch out for this!!
Is there a habit of lighting lamps at home in the month of Karthikai? So watch out for this!!

தமிழ் மாதங்களில் 8 மாதமான கார்த்திகை மிகவும் விசேஷம் நிறைந்தவையாகும்.இந்த மாதத்தில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கம்.கார்த்திகை என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது தீபம் தான்.

அதேபோல் கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் சிவன் பக்தர்களால் கடைபிடிக்க கூடிய ஒரு முக்கிய விரதமாகும்.கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு திங்கட் கிழமை நாளிலும் இந்த சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாள் அன்று மட்டும் வீட்டில் விளக்கேற்றாமல் இந்த மாதத்தில் எல்லா நாட்களிலும் விளக்கேற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.கார்த்திகை மாதத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.வீட்டில் இரண்டு மண் விளக்கு ஏற்றி வைத்தால் கூட போதுமானது.

இப்படி ம் மண் விளக்கு வைக்கும் முன் தரையில் சிறிய வாழை இலை அல்லது அரச இலை அல்லது ஆலமர இலையை வைத்து தீபம் ஏற்றலாம்.சூரிய உதயமாவதற்கு முன்னரே விளக்கு வைக்க வேண்டும்.காலை 6 மணி முன்பாகவே விளக்கு வைக்க வேண்டும்.இவ்வாறு கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் இப்படி விளக்கு வைத்தால் குலதெய்வம் மற்றும் சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.எனவே இனி வரும் நாட்களில் தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு கடவுளின் அருளை பெறுங்கள்.

Previous articleகாலையில் எழுந்ததும் இந்த பொருள் சேர்த்த தண்ணீரில் முகம் கழுவினால்.. பருக்கள் கரும்புள்ளிகள் வராது!!
Next articleஉதடுகளை சிவப்பாக மாற்ற வீட்டிலேயே லிப் பாம் செய்யலாம்!! தேவைப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை விவரம் இதோ!!