நெஞ்சு சளி அதிகமாக இருக்கின்றதா? அப்போ இஞ்சி மற்றும் உப்பை இப்படி பயன்படுத்துங்க!
நெஞ்சு சளி என்பது நம்முடைய மார்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் கெட்டியான திரவம் ஆகும். இது நமக்கு ஒரு சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த நெஞ்சு சளியை நாம் விரைவில் குணப்படுத்த வேண்டும்.
நெஞ்சு சளியை குணப்படுத்த நிறைய மருத்துவ முறைகள் உள்ளது. இருப்பினும் நெஞ்சு சளி பிரச்சனை இருப்பவர்கள் பால் தொடர்பான உணவுகள், மது, அதிகம் காரம் கொண்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த நெஞ்சு சளியை குணப்படுத்த உப்பு மற்றும் இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* இஞ்சி
* உப்பு
செய்முறை…
முதலில் இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் சிறிதாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள் மீது உப்பை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உப்பு தடவி வைத்துள்ள இந்த இஞ்சியை அப்படியே நாம் சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் தேங்கியுள்ள சளி மொத்தமும் வெளியேறி விடும்.