ராகுல்காந்தியை கொலை செய்ய திட்டமா? மத்திய அரசு பொருப்பற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன?

Photo of author

By Rupa

ராகுல்காந்தியை கொலை செய்ய திட்டமா? மத்திய அரசு பொருப்பற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன?

ராகுல்காந்தி சில தினங்களுக்கு காஷ்மீர்-க்கு சுற்றுலாபயணம் மேற்கொண்டார்.அவ்வாறு அவர் மேற்கொண்ட போது பல புனித இடங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார்.அதனையடுத்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் என்னும் பகுதியில் ஒருவர் திருமணத்தில் ராகுல்காந்தி கலந்துக்கொண்டார்.அவர் கலந்து கொண்டு சென்ற ஓரிரு நிமிடங்களுக்குள்ளே அந்த பகுதியில் தீவீரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தினர்.அந்த குண்டு வெடிப்பில் அங்கு சுற்றியுள்ள மக்கள் படுகாயாம் அடைந்தனர்.

அதனையடுத்து அங்கிருந்த ஓர் செய்தியாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.அவர் வைத்திருந்த பையில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.காஷ்மீரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை பற்றி மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே செய்தியாளர்கள் முன்னிலையில் பல கேள்விகளை எழுப்பினார்.அதில் முதலாவதாக ஜம்முவில் நடைபெற்ற குண்டுவெடிப்பை பற்றி கண்டறியாமல் மத்திய அரசு இன்றளவும் பொருப்பற்றதாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்த குண்டு வெடிப்பானது ராகுல்காந்தி உள்ள இடத்திலிருந்து 500 மீட்டர் இடைவெளியிலேயே நடந்துள்ளது.இதன் பின்னணி ராகுல் காந்தியை கொலை செய்ய நடத்தப்பட்ட திட்டமாக இருக்க என சந்தேகம் வருவதாக கூறினார்.நாட்டிற்காக போராடிய இரு உயிர்களையும் இதுவரை இழந்துவிட்டோம்.மேலும் நாட்டிற்காக போராட இருக்கும் எந்த உயிர்களையும் நாங்கள் இழக்க தயாராக இல்லை என்றாவாறு பேசினார்.

அதுமட்டுமின்றி இவரது தந்தையை குண்டு வெடிப்பில் இழந்து போல இவரையும் கொலை செய்ய சதி நடக்கிறதா என்பது தெரியவில்லை என்று கூறினார்.மேலும் இவர் கூறியது,மகாராஷ்டிரா அரசு ஐடி பிரிவில் சிறந்து விளங்குபவர்களுக்கு ராஜீவ்காந்தி பெயரில் விருது வழங்க உள்ளதாகவும் கூறினார்.ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்ட கேல்ரத்னா விருது தற்போது போடி மாற்றம் செய்து வேறு பெயர் வழங்கியுள்ளார்.அதனால் இம்முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கூறினார்.