முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

Photo of author

By Divya

முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

Divya

உங்கள் கால் பாத அழகை கெடுக்கும் பித்த வெடிப்பை மறைய வைக்க செலவு இல்லாத ஒரு அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.முட்டை ஓடுடன் சில பொருட்களை பயன்படுத்தி க்ரீம் செய்து பாதங்களில் பூசினால் பலன் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)முட்டை ஓடு – பத்து
2)தயிர் – ஒரு டேபுள் ஸ்பூன்
3)ஷாம்பு – ஒரு டேபுள் ஸ்பூன்
4)விளக்கெண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன்
5)தேங்காய் எண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன்
6)தேன் – ஒரு டேபுள் ஸ்பூன்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் பத்து முட்டை ஓடுகளை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறிது நேரம் உலர்த்திய பிறகு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு சலிக்க வேண்டும்.இதில் நைஸாக உள்ள முட்டை பவுடரை ஒரு டப்பாவிலும்,கொரகொரப்பாக முட்டை தூள் ஒரு டப்பாவிலும் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் கொரகொரப்பாக உள்ள முட்டை தூளில் ஒரு டேபுள் ஸ்பூன் அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு டேபுள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டேபுள் ஸ்பூன் ஷாம்புவை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

3.பின்னர் அதில் ஒரு டேபுள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.இப்பொழுது கால் பாதங்களை சூடான நீரில் வைத்து கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் தயாரித்து வைத்துள்ள கலவையை பாத வெடிப்பின் மீது தடவி நன்றாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

4.பின்னர் 30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் பாதங்களை கழுவி சுத்தமாக்க வேண்டும்.இதுபோன்று தொடர்ந்து 15 தினங்கள் இரவு நேரத்தில் செய்ய வேண்டும்.

5.அதன் பிறகு நைஸ் முட்டை ஓட்டு தூளை ஒரு கிண்ணத்தில் போட்டு அரை டேபுள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் அரை டேபுள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை கால் பாத வெடிப்பின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதன் பிறகு குளிர்ந்த நீர் கொண்டு பாதங்களை கழுவ வேண்டும்.இப்படி செய்தால் பாத வெடிப்பு சீக்கிரமாக மறையும்.