முகத்தில் அங்கங்கே வீக்கம் ஏற்படுகின்றதா? அதற்கு வேப்பிலை மற்றும் மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க!!
நம்மில் ஒரு சிலருக்கு முகத்தில் எந்தவித காரணமும் இல்லாமல் அங்கங்கே திடீரென்று வீக்கங்கள் ஏற்படும். இந்த வீக்கத்தை குறைக்க ஆங்கில மருத்துவத்தில் பல வழிகள் இருக்கின்றது. இருப்பினும் இயற்கையான வழியில் எவ்வாறு இந்த வீக்கத்தை குறைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* வேப்பிலை
* மஞ்சள் தூள்
செய்முறை…
முதலில் வேப்பிலையை எடுத்து சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜார் எடுத்து அதில் வேப்பிலைகளை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் வீக்கங்கள் இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள வீக்கங்கள் குறையும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் இரண்டும் இயற்கையான கிருமி நாசினி ஆகும். ஆதலால் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.