உடலில் பித்தம் அதிகமாக இருக்கின்றதா? அதை குறைக்க இதை மட்டும் செய்யுங்க! 

Photo of author

By Sakthi

உடலில் பித்தம் அதிகமாக இருக்கின்றதா? அதை குறைக்க இதை மட்டும் செய்யுங்க!
நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உடலில் சுரக்கும் நீர்தான் பித்த நீர் ஆகும். இந்த பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். பித்தம் அதிகமானால் தலைச்சுற்றல், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடலில் பித்தம் அதிகமாகக் காரணம் நாம் அதிக நேரம் கண் விழித்து உறங்காமல் இருப்பது தான். மேலும் டீ, காபி போன்ற பானங்களை குடிப்பதாலும் பித்தம் அதிகமாகும். இந்த பித்தத்தை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* சுக்கு
* எலுமிச்சை
செய்முறை:
முதலில் சுக்கை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சுக்கை தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பவுலில் அரைத்து வைத்துள்ள சுக்கு பொடியை சேர்க்க வேண்டும்.
பின்னர் இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை அப்படியே சாப்பிட பித்தம் குறையும்.