நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

0
162
Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!
Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு நடைபெறுவதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களை பயின்று வந்தனர். தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கவே 10  மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியது, தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அரியலூர்  மாணவி தற்கொலை பற்றி கூறினார். அரியலூர்  மாணவியின் தற்கொலையை அரசியலாக்கி விடாதீர்கள் என்று தெரிவித்தார். மாணவியின் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியின் தற்கொலை விவகாரத்தில் பின்னணியில் இருப்பவர்கள்  யாராக இருந்தாலும் கட்டாயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் இந்த ஆண்டு பொதுத் தேர்வு பற்றி சில தகவல்களை தெரிவித்தார். அதில், நடப்பாண்டு பொது தேர்வானது கட்டாயம் மே மாதம் நடைபெறும் என்று கூறினார். தற்பொழுது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நிலை சற்று குறைந்தவுடன் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். அதனையடுத்து பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். கட்டாயம் இந்த ஆண்டு 10 மற்றும்  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Previous articleஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Next articleமகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!