உங்கள் தலையில் உள்ள பேன்களை ஒழித்துக் கட்ட வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.நீண்ட வருட பேன் தொல்லைக்கு ஒரு பயனுள்ள தீர்வு இங்கு தரப்பட்டிருக்கிறது.
தீர்வு 01:
1)வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – தேவைக்கேற்ப
நீங்கள் பிரஸான வெந்தயக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தலைக்கு வெந்தய கீரை பேஸ்டை அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
அரை மணி நேரம் வெந்தயக் கீரையை விழுதை ஊறவைத்த பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் பேன் தொல்லை ஒழியும்.
தீர்வு 02:
1)வேப்பிலை – ஒரு கைப்பிடி
2)வேப்பங்கொட்டை – 20 கிராம்
3)தண்ணீர் – தேவைக்கேற்ப
முதலில் வேப்பிலை மற்றும் வேப்பங் கொட்டையை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.இதனை தண்ணீர் விட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு தலையை ஈரப்படுத்திவிட்டு அரைத்து வைத்துள்ள வேப்பிலை பேஸ்டை அப்ளை செய்து குளித்து வந்தால் பேன் தொல்லை ஒழியும்.
தீர்வு 03:
1)மிளகு – ஒரு தேக்கரண்டி
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி
கருப்பு மிளகை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு தயிர் சேர்த்து பேஸ்டாக கலந்து கொள்ள வேண்டும்.பிறகு இதை தலைக்கு தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் பேன் தொல்லை முழுமையாக ஒழியும்.
தீர்வு 04:
1)ஆவாரம் பூ – 20 கிராம்
2)தண்ணீர் – சிறிதளவு
ஆவாரம் பூவை தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தலைக்கு தடவி குளித்தால் பேன் தொல்லை ஒழியும்.