வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By CineDesk

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!!

CineDesk

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!!

பொதுவாக ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ ஒருவரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்குவதற்கு முன்பாக அதன் ஆர்.சி புக் இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்.

அதாவது ஒரு வண்டியை வாங்குவதற்கு முன்பு அந்த வண்டியின் ஆர்சி புக்கில் இருக்கின்ற எண்ணும், சேர்ஸ் எண்கள், என்ஜினில் இருக்கக்கூடிய எண்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு தான் வாங்க வேண்டும்.

ஒருவேளை யாராவது ஒருவர் ஒரு வண்டியை திருடி அதை மற்றவருக்கு விற்று விட்டால் அவருக்கு IPC section 379 இன் படி திருடியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மேலும் அந்த வழக்கை பொறுத்து அபராதமும் விதிக்கப்படும். இதுபோலவே 2007 ஆம் ஆண்டு விஜயகுமார் என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் தனது காரை மற்றொருவருக்கு விற்று விட்டார்.

அந்த காரானது இவருக்கு பிறகு 2009 ஆம் ஆண்டுக்குள் மூன்று பேரிடம் மாறிவிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த காரானது விபத்திற்குள்ளானது. இந்த விபத்து ஏற்பட்டதை அடுத்து வாகனம் யார் பேரில் இருக்கிறதோ அவருக்கு தான் தண்டனை தர முடியும் என்று 2007 ஆம் ஆண்டு காரை விற்பனை செய்த விஜயகுமாருக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பானது மோட்டார் வாகன சட்டம் 1988 section 2 வின் படி வழங்கப்பட்டது. எனவே ஒரு வண்டியை வாங்கி விட்டாலோ அல்லது விற்று விட்டாலோ அந்த வண்டி யாரின் பெயரில் இருக்கிறதோ அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்.

எனவே ஒரு வண்டியை வாங்குவதற்கு முன்பாக அதில் இருக்கக்கூடிய ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா மேலும் அது போலி வண்டியா அல்லது திருட்டு வண்டியா என்பதையெல்லாம் சரி பார்த்து வாங்க வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.