இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்?

0
292
Is there such a romantic couple in this world!.. Because the boyfriend urinated there!.. Punishment given by the girlfriend!..
Is there such a romantic couple in this world!.. Because the boyfriend urinated there!.. Punishment given by the girlfriend!..

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்?

தென் கொரியாவை சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்- கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்கு சென்று இருக்கின்றார். அங்கு சென்ற காதலன் காதலியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். நன்றாக பேசிக் கொண்டிருந்த இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த வாக்குவாதம் முற்றி பெரிய சண்டையாக ஆகிவிட்டது. இதில் மூக்கு சிவந்து  கோபமடைந்த காதலன் நேராக காதலியின் பெட்ரூம் அறைக்கு சென்றுள்ளார்.அந்த அறையில் காதலி ஹேண்ட் பேக்கை ஒன்று வைத்திருந்தார்.

அந்த பேக்கில் காதலன் சிறுநீர் கழித்திருக்கின்றார். இதனைப் பார்த்த காதலியோ கோபத்தின் உச்சிக்கு சென்று இருக்கிறார். இந்த பேக்கின் விலை ஒன்றரை லட்சம் இருக்கும். விலை உயர்ந்த இந்த ஹேண்ட் பேக்கின் மீது சிறுநீர் கழித்ததால் காதலி அதற்கு நஷ்ட ஈடுதருமாறு  நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

விசாரணையின் போது அந்த காதலன் நான் சிறுநீர் கழிக்கவில்லை. தன் காதலியை வெறுப்பேற்றுவதற்காக அப்படி செய்ததாக நடித்தேன் என்று காதலன் கூறியுள்ளார். இருந்தாலும் இதனை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளாத காதலி பரிசோதனை செய்யுமாறு கூறியிருந்தார்.

பரிசோதனையில் காதலன் பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காதலனை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு பேக்கீல் சிறுநீர் கழித்ததற்காக நீதி மன்றம் அவருக்கு ஒன்றரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் சிலர் இதனை விமர்சித்து கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

Previous articleதமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்! தமிழக அரசுக்கு வேண்டுதல் விடுத்த மருத்துவர் ராமதாஸ்!
Next articleவிளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்!