கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு ஆச்சரியப்படும் காரணம் உள்ளதா?

Photo of author

By Gayathri

கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு ஆச்சரியப்படும் காரணம் உள்ளதா?

Gayathri

Updated on:

kolam-with-pumkin-flower-on-a-blob-of-cow-dung

நம் தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாக உள்ள மார்கழி நேற்று தொடங்கி வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.இந்த மார்கழி பீடை மாதம் என்று சொல்லப்படுகிறது.பீடு மாதம் என்பது மருவி பீடை மாதம் என்று தற்பொழுது சொல்லப்படுகிறது.

 

இந்த மார்கழி மாதம் தேவர்களுக்கு உகந்தது என்பதால் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலருக்கும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக உள்ளதால் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.

 

இதன் காரணமாகவே திருமணம்,காதுகுத்து,நிச்சயதார்த்தம் போன்றவை இந்த மாதத்தில் வைப்பதை தவிர்க்கின்றனர்.ஆன்மீகத்திற்கு உரிய மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து நீராடிவிட்டு வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவதை பெண்கள் தவறாமல் செய்து வருகின்றனர்.

 

அதிகாலை நேரத்தில் வாசல் கூட்டி சாணம் தெளித்து வெள்ளை மற்றும் கலர் பொடியில் கோலமிட்டு வீட்டை அழகுபடுத்துவதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.சிலர்ட் கோலத்தின் நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது,பூசணிப் பூ வைப்பது போன்றவற்றை செய்கின்றனர்.

 

இதில் கோலத்தின் நடுவில் பூசணிப் வைப்பதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்தால் நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.கோலத்தின் நடுவில் பூசணிப் வைப்பது இன்று நேற்றைய பழக்கம் அல்ல.இது காலம் காலமாக பின்பற்றப்படும் ஒரு பழக்கமாக இருக்கிறது.

 

அக்காலத்தில் கோலத்தின் நடுவில் பூசணிப்பூ வைத்தால் வீட்டில் பெண்,ஆண் பிள்ளைகள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான அர்த்தமாக பார்க்கப்பட்டது.இதை வைத்து பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கப்பட்டது.எங்கள் வீட்டில் பெண் பிள்ளை திருமண வயதில் உள்ளது என்பதை மறைமுகமாக மற்றவர்களுக்கு தெரிவிக்க கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்தனர்.