திருப்பதியில் இப்படி ஒரு சுவாமி தர்ஷனமா? பக்தர்கள் மிக்க மகிழ்ச்சி!

Photo of author

By Hasini

திருப்பதியில் இப்படி ஒரு சுவாமி தர்ஷனமா? பக்தர்கள் மிக்க மகிழ்ச்சி!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் அனைவரும் மிக சிறப்பாக வி.ஐ.பி. போல தர்ச்சனதிக்கு போகின்றனர்.காரணம் என்ன வென்று பார்த்தால் கொரோனா லாக்டவுன் மற்றும் தொற்றின் காரணமாக கூட்டம் சேர கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு செல்ல வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் நுழைந்தது முதல், தள்ளுமுள்ளு சத்தம் இல்லாமல், ஒருவரை ஒருவர் நெருக்காமல், நமோ நாராயணா! நமோ வெங்கடேசாயா! எனும் மந்திரத்தை மட்டுமே கேட்க முடிந்தது.

பக்தர்கள் மிக நிம்மதியாக, மிகவும் பொறுமையாக நம் பெருமாளை சேவித்து மன திருப்தியுடன் வெளியை வருகின்றனர்.அனைத்து பொது மக்களும் ஸ்பெஷல் வி.ஐ.பி. போல் தரிஷனம் முடித்ததை போன்ற உணர்வுடன்  வெளி வருவதாக கூறினார்கள்.

திருமலை திருப்பதியில், இலவச தரிசன முறையை முழுதாக மூடிஇருந்தாலும், பக்தர்கள் ரூ.300 சிறப்பு கட்டண டிக்கெட்களை பெரும் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது.

ஜரகண்டி… ஜரகண்டி என்ற சத்தம் இல்லாமல், நிதானமாக செல்லவும், இடைவெளி விட்டு, தள்ளிக்கொண்டு போகாமல் செல்லவும் என பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் கேட்டு கொள்கின்றனர்.

கொரோனாவின் கொடூரத்தில் இந்த ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடவுள் கண் திறந்து பார்க்க வேண்டும், நிலைமை மாற வேண்டும் என்பதே அனைத்து மக்களின் வேண்டுதலாக இருக்கும் என நம்புவோம்.    .