முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்பி மறைவு! சோகத்தில் டிடிவி தினகரன்! காரணம் இதுதான்!

0
204
TTV Dhinakaran
TTV Dhinakaran

முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்பி மறைவு! சோகத்தில் டிடிவி தினகரன்! காரணம் இதுதான்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா வாண்டையார் வயது மூப்பு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார் என்று தெரிவிக்கப்படுகிறது தஞ்சாவூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களில் கூட துளசி அய்யா வாண்டையார் குடும்பத்திற்கு தனி மரியாதையும் மதிப்பும் பாரம்பரியமும் இருந்து வருகிறது.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

அவருடைய குடும்பத்திற்கு இருந்து வரும் இந்த மதிப்பு மரியாதை மற்றும் பாரம்பரியம் உள்ளிட்டவை விட்டால் காரணமாகவோ அல்லது அதிகாரம் காரணமாகவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள். அதோடு அன்பு காரணமாகவும் கருணை காரணமாகவும் மக்களின் இதயங்களை கவர்ந்து விட்டுச் சென்ற அவருடைய முன்னோர்களான தந்தையும் மற்றும் மூதாதையர்களும் சேர்த்து வைத்த பாரம்பரியத்தை தக்க வைத்து வருகின்றார் துளசி அய்யா வாண்டையார் என்று தெரிவிக்கிறார்கள்.

தேசத் தந்தை காந்தியடிகள் அவர்களின் சீடராக இருந்து வந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பூண்டி துளசி அய்யா வாண்டையார் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1991 முதல் 96 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் எந்தவிதமான சலுகையையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

விமான பயணம் மற்றும் ரயில் பயணம் மற்றும் கார் டீசல் செலவு என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் அரசின் சலுகைகள் எதுவும் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு தன்னுடைய சொந்த நிதியில் டெல்லிக்கு சென்று வந்ததாக தெரிவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா வாண்டையார் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று இயற்கை எய்தினார். துளசி அய்யா வாண்டையார் உடல் அவருடைய சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் பூண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது பூண்டி தொள்ளாயிரத்தி ஐயா அவர்களின் குடும்பத்தில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததுதான்.

Previous articleதிருப்பதியில் இப்படி ஒரு சுவாமி தர்ஷனமா? பக்தர்கள் மிக்க மகிழ்ச்சி!
Next articleகொரோனாவை அழிக்க வந்தது புதிய மருந்து! இனி ஆக்ஸிஜனுக்கு பாய் பாய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here