சீனியர் சிட்டிசன்களுக்கு இவ்வளவு வரி சலுகையா?

0
124

சீனியர் சிட்டிசன் என அழைக்கப்படும் மூத்த குடிமக்கள் எனப்படும் 60-80 வயதிற்கு மேற்பட்டோருக்கு, மிக மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படும் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு கீழ்காணும் சலுகைகள் பொருந்தும்.

தற்போது 2020-21ஆம் ஆண்டுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சம் எனவும் மற்றவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மட்டுமே. மிக மூத்த குடிமக்களுக்கோ ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.

மேலும் வருமான வரிச் சட்டம் பிரிவு 208இன் கீழ், ஒரு நிதியாண்டுக்கு ரூ.10,000க்கும் மேல் வரிக் கடன்பாடு கொண்ட நபர்கள் அட்வான்ஸ் வரி செலுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் வருமான வரிச் சட்டப் பிரிவு 207இன் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு இதில் நிவாரணம் அளிக்கப்படுகிறது. எந்த ஒரு  வருமானமும் இல்லாமல் இல்லாத சீனியர் சிட்டிசன்கள் அட்வான்ஸ் வரி செலுத்த தேவையில்லை.

வருமான வரித் தாக்கல் செய்வோர் கட்டாயமான டிஆர்1, ஐடிஆர்4 படிவங்களில் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.  ஆனால் சீனியர் சிட்டிசன்களுக்கு இதில் விலக்கு உண்டு. சீனியர் சிட்டிசன்கள் சாதாரணமாக பேப்பர் முறையில்  தாக்கல் செய்யும் வசதியும் உள்ளது.

சீனியர் சிட்டிசன்கள் ஆண்டுக்கு ரூ.50,000 வரை செலுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு பிரீமியத் தொகைக்கு, சட்டப் பிரிவு 80டி-இன் கீழ் சலுகை  உண்டு. மருத்துவ செலவிற்கும் சீனியர் சிட்டிசன் வருமான வரிச் சட்டப் பிரிவு 80டி-இன் கீழ்,  ரூ.1 லட்சம் வரை சீனியர் சிட்டிசன்கள் சலுகை  பெறலாம்.

 

Previous articleகல்லூரி இறுதியாண்டு தேர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!
Next articleஇன்று முதல் மூடப்படுகின்றது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்